Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

BMW இண்டஸ்ட்ரீஸ் லாபம் 42.7% உயர்வு

BMW இண்டஸ்ட்ரீஸ் லாபம் 42.7% உயர்வு

மொத்த வருவாய் 33 சதவீதம் உயர்ந்து ரூ.195.42 கோடியை எட்டியது. வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.48.73 கோடியானது.

பகிரவும் WhatsApp Facebook

செப்டம்பருடன் முடிந்த இரண்டாம் காலாண்டில், எஃகு பதப்படுத்தும் பிஎம்டபிள்யு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 42.7 சதவீதம் உயர்ந்து ரூ.21.62 கோடியானது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் லாபம் ரூ.15.15 கோடியாக இருந்தது.

மொத்த வருவாய் 33 சதவீதம் உயர்ந்து ரூ.195.42 கோடியை எட்டியது. வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.48.73 கோடியானது. எனினும், அதன் லாப விகிதம் 26.5 சதவீதத்திலிருந்து 24.9 சதவீதமாகக் குறைந்தது.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் புதிய எஃகு பதப்படுத்தும் வளாகத்தின் முதல் கட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அங்குள்ள எஃகு வண்ணப் பூச்சு உற்பத்திப் பிரிவுக்கு அக்டோபர் 5-ம் தேதி செயல்பாட்டு அனுமதி கிடைத்ததாக நிறுவனத் தலைவர் ராம் கோபால் பன்சால் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
மேற்காசியப் பதற்றம் தணிந்தால் நிதி பங்குகளுக்கு வாய்ப்பு
அடுத்த செய்தி
இந்தியாவில் ஐ.டி. பங்குகள் எழுச்சி ஏன்?

தொடர்புடைய செய்திகள்